மீண்டும் உச்சமடைந்த பெட்ரோல் விலை - பல மாவட்டங்களில் ரூ.100-க்கு விற்பனை

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
x
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை கடந்திருப்பதால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழகத்தில் கடந்த ஆகஸ்ட் மாதம் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்ததால் வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இதனையடுத்து, ஆகஸ்ட் 13-ஆம் தேதி, தமிழக அரசு பெட்ரோல் விலையை 3 ரூபாய் குறைத்தது. இதனால் சென்னை உட்பட தமிழகத்தில் பெட்ரோல் விலை 100 ரூபாய்க்கு குறைவாக விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், கடந்த சில தினங்களாக பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்ந்துவரும் நிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெட்ரோல் விலை மீண்டும் 100 ரூபாயை எட்டியது.
சென்னையிலும் பெட்ரோல் விலை 100 ரூபாயை நெருங்கியுள்ளது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 99 ரூபாய் 80 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 95 ரூபாய் 2 காசுகளுக்கும் விற்பனையானது. செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, தஞ்சை, ஈரோடு, விருதுநகர், நெல்லை, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல் விலை 100 ரூபாயை கடந்திருக்கிறது.



Next Story

மேலும் செய்திகள்