வைகோ, திருமாவளவன் மீதான வழக்கு - ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.
வைகோ, திருமாவளவன் மீதான வழக்கு - ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு
x
காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி போராட்டம் நடத்தியதாக வைகோ மற்றும் திருமாவளவன் உள்ளிட்டோர் மீது தொடரப்பட்ட வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு  சென்னை எம்.பி.மற்றும் எம்.எல்.ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் இந்த வழக்கு, விசாரணை செய்யப்பட்டு வந்தது. இந்த நிலையில் தங்கள் மீதான  வழக்கை ரத்து செய்யக்கோரி வைகோ மற்றும் திருமாவளவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி நிர்மல்குமார், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மற்றும்  திருமாவளவன் மீது பதியபட்ட வழக்கில் எந்த முகாந்திரம் இல்லை எனக்கூறி வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.


Next Story

மேலும் செய்திகள்