3 வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை - மாணவர்களின் கோரிக்கை ஏற்பு

சிவகங்கை மாவட்ட கீழப்பளை கிராமத்தில் பேருந்து சேவை தொடங்கி உள்ளது.
3 வருடங்களுக்கு பிறகு பேருந்து சேவை - மாணவர்களின் கோரிக்கை ஏற்பு
x
சிவகங்கை மாவட்ட கீழப்பளை கிராமத்தில் பேருந்து சேவை தொடங்கி உள்ளது. கீழப்பளை கிராமத்தில் இருந்து உயர் கல்விக்காக நாள்தோறும் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள்  ஆட்டோவில் ஆபத்தான பயணம் மேற்கொண்டு வந்தனர்.  ஆகவே, பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென மாணவர்கள் மற்றும் பொதுமக்களின் 3 ஆண்டுகால கோரிக்கையாக இருந்தது. இதன் எதிரொலியாக மானாமதுரை எம்.எல்.ஏ., தமிழரசி, பலரும் பயன்பெறும் வகையில் பேருந்து சேவையை,  கொடி அசைத்து தொடங்கி வைத்தார். இதனால், மகிழ்ச்சி அடைந்த  கிராம மக்கள் மேளதாளத்துடன் கொண்டாடினர்.


Next Story

மேலும் செய்திகள்