மின் வயரில் பழுது; ரயில் சேவை பாதிப்பு - நடுவழியில் நின்ற மின்சார ரயில்கள்
சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மின்வயரில் ஏற்பட்ட பழுதால் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டது.
சென்னை தாம்பரம் - கடற்கரை வழித்தடத்தில் மின்வயரில் ஏற்பட்ட பழுதால் மின்சார ரயில்சேவை பாதிக்கப்பட்டது. பழுது ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுக்கின்றனர். சென்னை தாம்பரத்தில் இருந்து கடற்கரை நோக்கி சென்றுகொண்டிருந்த மின்சார ரயில் திரிசூலம்- மீனம்பாக்கம் ரயில் நிலையம் இடையே வந்த போது, மின் வயர் பழுதடைந்ததால், ரயிலை மேலும் இயக்க முடியாமல் ஓட்டுநர் நிறுத்தினார். இதனால் கடற்கரை நோக்கி சென்ற மற்ற ரயில்களும்
ஆங்காங்கே வழியிலேயே நிறுத்தப்பட்டன.இதனால், சென்னை கடற்கரையில் இருந்து காஞ்சிபுரம் வரை இரு மார்க்கத்தில் செல்லும் மின்சார ரயில் சேவை ஒரு மணி நேரமாக பாதிக்கப்பட்டது.பயணிகள் குறித்த நேரத்தில் வேலைக்குச் செல்ல முடியாமல் அவதிக்குள்ளாகினர்.

Next Story