ஏடிஜிபி ரவி, ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறப்பு அதிகாரிகளாக நியமனம் - தமிழக அரசு உத்தரவு
தமிழக காவல்துறை ஏடிஜிபி ரவி மற்றும் ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோரை சிறப்பு அதிகாரிகளாக நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெருகிவரும் மக்கள் தொகை, அதிகரிக்கும் குற்றங்ளை தடுக்கவும், நிர்வாக சுமையை குறைக்கவும் சென்னை மாநகர காவல் துறையை பிரித்து ஆவடி மற்றும் தாம்பரத்தை தலைமையிடமாகக் கொண்டு ஆணையரகம் உருவாக்கப்படும் என முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன் படி புதிதாக உருவாக்கப்பட உள்ள தாம்பரம் ஆணையகத்திற்கு கூடுதல் ஏடிஜிபி ரவி ஐபிஎஸ், ஆவடி ஆணையகத்திற்கு கூடுதல் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் ஐபிஎஸ் ஆகியோர் சிறப்பு அதிகாரிகளாக நியமித்து உள்துறை செயலாளர் உத்தரவு பிறப்பித்துள்ளார். புதிதாக காவல் ஆணையரகம் உருவாக்கப்படும் போது நிர்வாகப் பணிகளை மேற்கொள்ள மூத்த அதிகாரிகள் சிறப்பு அதிகாரிகளாக நியமிக்கப்படுவர். நிர்வாக ரீதியான பணிகள் அனைத்தும் முடிந்தபின் அவர்களே ஆணையர்களாக செயல்படுவர்.
==============

Next Story