தேர்வு முறைகேடு - 66 பேருக்கு வாழ்நாள் தடை

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு முறைகேடு தொடர்பாக மேலும் 66 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து ஆசிரியர் தேர்வு வாரியம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
தேர்வு முறைகேடு - 66 பேருக்கு வாழ்நாள் தடை
x
அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக இருந்த விரிவுரையாளர் பணிகளுக்கான போட்டித் தேர்வு கடந்த 2017 ஆம் ஆண்டு  நடந்தது. அந்த தேர்வில் பலர் முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்ததை அடுத்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும், தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட 196 தேர்வர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.இந்த நிலையில் மேலும், அறுபத்தி ஆறு பேர் முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறி அவர்களுக்கு வாழ்நாள் தடை விதித்து, ஆசிரியர் தேர்வு வாரியம் உத்தரவிடப்பட்டுள்ளது.மேலும், வரும் 28, 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ள போட்டித் தேர்வுகளில் இவர்கள் பங்கேற்க முடியாது ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


Next Story

மேலும் செய்திகள்