பெண் போலீசை தாக்கிவிட்டு செயின் பறிப்பு - ஏழரை சவரன் நகைகளை பறித்துச் சென்ற 2 பேர்
திண்டிவனத்தில் பெண் போலீசை தாக்கிவிட்டு தங்க செயின்களை பறித்துச் சென்ற 2 பேரை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
திண்டிவனம் மரக்காணம் ரோடு காமராஜர் தெருவில் வசித்து வருபவர் சத்யா. இவர் பிரம்மதேசம் காவல் நிலையத்தில் பெண் போலீசாக பார்த்து வருகிறார். இவரின் கணவர் சரவணனும் ஒலக்கூர் காவல் நிலையத்தில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று சத்யா வேலை முடித்து விட்டு தன் இருசக்கர வாகனத்தில் வந்த போது திடீரென எதிரே வந்த 2 பேர் சத்யாவின் கழுத்தில் அணிந்திருந்த ஏழரை சவரன் மதிப்பு கொண்ட 2 செயின்களை பறித்துச் சென்றனர். இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
Next Story