விடிய, விடிய பெய்த மழை - ஊருக்குள் புகுந்த மழை நீர்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக ஊருக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில் விடிய விடிய பெய்த மழையின் காரணமாக ஊருக்குள் மழை நீர் புகுந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் சுற்றுவட்டார பகுதியில் நேற்று இரவு பெய்த கன மழையின் காரணமாக, சாலைகளில் வெள்ளம் போல் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிக்குள் மழை நீர் சென்றதால் வீடுகள் மற்றும் கடைக்குள் தண்ணீர் புகுந்துள்ளது. மேலும் வாகனங்களை மூழ்கும் அளவிற்கு ஊருக்குள் தண்ணீர் ஓடியதால் நடு ரோட்டிலேயே வாகனங்களை நிறுத்தி வைக்க வேண்டிய நிலையும் ஏற்பட்டுள்ளது. மக்காச்சோளம் பயிரிடப்பட்டுள்ள விளைநிலங்களிலும் மழை நீர் சூழ்ந்துள்ளதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். பள்ளிபாளையம் பகுதியில் தொடர்ந்து பெய்த மழையின் காரணமாக நான்கு மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே நான்கு வழிச்சாலை சந்திப்பு பகுதியில் உள்ள பெரிய கால்வாயை சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story