உயர் அலுவலர்களுக்கான அடுக்குமாடி குடியிருப்பு - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்
சென்னையில், வருமானவரித்துறை அலுவலக வளாகத்தில், உயர் அலுவலர்களுக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.
சென்னையில், வருமானவரித்துறை அலுவலக வளாகத்தில், உயர் அலுவலர்களுக்காக கட்டப்பட்ட அடுக்கு மாடி குடியிருப்பை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார்.நுங்கம்பாக்கத்தில் உள்ள ஆயகர் பவன் வளாகத்தின் பின்புறத்தில், உயர் அலுவலர்களுக்காக, 19 தளங்களுடன் கூடிய முப்பத்தி எட்டு அடுக்கு மாடி குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. சிகரம் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த அடுக்குமாடி குடியிருப்பை நேற்று மாலை நடந்த விழாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் திறந்து வைத்தார். அதன் பிறகு நடந்த பூஜையில் பங்கேற்ற அமைச்சர் நிர்மலா சீதாராமன், அடுக்குமாடி குடியிருப்பை சுற்றிப்பார்த்தார். நிகழ்ச்சியை முடித்துக்கொண்டு காரில் ஏறி சென்ற அமைச்சருக்கு, சாலை ஓரமாக நின்ற துப்புரவு பணியாளர்கள் வணக்கம் தெரிவித்தனர். இதை கண்டதும் காரில் இருந்து இறங்கிய நிர்மலாசீதாராமன், துப்புரவு பணியாளர்களை நேரில் சென்று நலம் விசாரித்ததோடு, அவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டார்.
Next Story