"புகாருக்கு இடம் தராமல் உள்ளாட்சி தேர்தல்" - உயர்நீதிமன்றம் உத்தரவு
எந்த புகாருக்கும் இடம்தராத வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
எந்த புகாருக்கும் இடம்தராத வகையில் உள்ளாட்சி தேர்தலை நடத்துவது குறித்து, மாநில தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக, அதிமுக தொடர்ந்த வழக்கு தலைமை நீதிபதி அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.அப்போது அதிமுக சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2019ஆம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் பின்பற்றப்பட்ட நடைமுறைகளை இந்த தேர்தலிலும் பின்பற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.மேலும், வாக்கு எண்ணிக்கை மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது.தமிழகம் முதன்மை மாநிலம் என்ற பெருமைக்குரியது என குறிப்பிட்ட தலைமை நீதிபதி, தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் தேர்தலில் எந்த புகாரும் வராத வகையில் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார். ஒன்பது மாவட்டங்களில் மட்டுமே தேர்தல் நடக்க இருப்பதால், என்ன நடைமுறைகளை மேற்கொள்ளலாம் என்பது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி நாளை பதில் அளிக்க தமிழக அரசு தலைமை வழக்கறிஞருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை நாளைக்கு ஒத்திவைத்தார்.
Next Story