கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி - மத்திய அரசு

கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைக்க மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கூடங்குளத்தில் அணுக்கழிவு மையத்துக்கு அனுமதி - மத்திய அரசு
x
நெல்லை மாவட்டம், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் ஆயிரம் மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அணு உலைகள் இயங்கி வருகின்றன.
தற்போது 1000 மெகாவாட் உற்பத்தித் திறன் கொண்ட நான்கு அணு உலைகள் அமைக்கும் பணியை தேசிய அணுமின் சக்திக் கழகம் மேற்கொண்டு வருகிறது. கூடங்குளத்தில் அமைக்கப்பட்டு வரும் 3 மற்றும் 4-வது அணு உலைகள் செயல்பட தொடங்கியதும், அவற்றில் இருந்து உண்டாகும் அணுக்கழிவுகளை கூடங்குளம் வளாகத்தில் சேமித்து வைக்க இடத்தேர்வு அனுமதியை இந்திய அணுசக்தி ஒழுங்காற்று வாரியம் வழங்கியுள்ளது. கூடங்குளத்தில் மேலும் ஒரு அணுக்கழிவு மையம் அமைப்பதற்கு மத்திய அரசு அனுமதி வழங்கியதை கண்டித்து பல்வேறு தரப்பில் இருந்து எதிர்ப்பு எழுந்துள்ளது.நிரந்தரமாக அணுக்கழிவுகளை பாதுகாப்பாக வைப்பதற்கான ஆழ் நில கழிவு மையம் உருவாக்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்துள்ளது.



Next Story

மேலும் செய்திகள்