ஏ.டி.எம். மையத்தில் கிடந்த ரூ.2 லட்சம்: பணத்தை போலீசில் ஒப்படைத்த இளைஞர்
விருதுநகர் மாவட்டம் கான்சாகிப்புரத்தை சேர்ந்த லெனின் சென்னை வேளச்சேரியில் தங்கி, காலி இடங்களில் விவசாயம் செய்வது குறித்த பயிற்சியை மேற்கொண்டு வருகிறார்.
இந்த நிலையில், வேளச்சேரி 100 அடி சாலையில் உள்ள ஏ.டி.எம்.மிற்கு பணம் எடுக்க சென்றார். அப்போது அங்கு 2 லட்சம் ரூபாய் பணம் மற்றும் பத்திர ஆவணங்கள் இருந்துள்ளது. அதனை லெனின் பத்திரமாக எடுத்துச்சென்று வேளச்சேரி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தார். இதனை தொடர்ந்து லெனின் நேர்மையை பாராட்டிய போலீசார், பணம் மற்றும் பத்திரங்களை விட்டு சென்றது யார் என விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story