"தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்"; "இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது" - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை

தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.
தலைவர்களோடு இணைத்து விஜய் படங்கள்; இது போன்ற செயலில் ஈடுபடக் கூடாது - விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் எச்சரிக்கை
x
தலைவர்களோடு, விஜய்யின் படங்களை இணைத்தும், தேவையில்லாத வார்த்தைகளை பிரயோகித்தும், இனிமேல் போஸ்டர்கள் வெளியிடக்கூடாது என விஜய் மக்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஏற்கனவே இது போன்ற சம்பவங்கள் தொடர்பாக கண்டித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இது போன்ற செயல்களை விஜய் விரும்புவதில்லை என்றும், இது தொடர்ந்தால், விஜய்யின் அனுமதி பெற்று, இயக்க ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று புஸ்ஸி ஆனந்த் குறிப்பிட்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்