"நியாய விலைக்கடைகளில் அலைக்கழிப்பு கூடாது" - உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர்
நியாய விலைக்கடைகளுக்கு செல்ல இயலாதவர்களின், குடும்பத்தாரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எச்சரித்து உள்ளார்.
நியாய விலைக்கடைகளுக்கு செல்ல இயலாதவர்களின், குடும்பத்தாரை அலைக்கழித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை ஆணையர் எச்சரித்து உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,
தமிழகத்தில் ஒரே நாடு, ஒரே குடும்ப அட்டை திட்டம் அறிமுகப்படுத்திய பின்பு, நியாய விலைக்கடைகளில் விரல் ரேகை சரிபார்ப்பு முறையில் பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாகவும், நியாய விலைக்கடைகளுக்குச் செல்ல இயலாத முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், வேறொரு நபரின் விவரத்தைப் பதிவு செய்து பொருட்களைப் பெறலாம் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அங்கீகரிக்கப்படும் நபர்களுக்கு நியாய விலைக்கடை பணியாளரே பொருட்களை வழங்க வேண்டும் என்றும்,,..
இதுவரை அங்கீகாரப் படிவம் அளிக்காத அட்டைதாரர்கள், அங்கீகாரப் படிவத்தினை நியாய விலைக்கடையில் பெற்று பூர்த்தி செய்து தர வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது.இத்தகைய நடவடிக்கைகளை மீறி, இனி யாரேனும் குடும்பத்தாரை அலைக்கழித்தால், அவர்கள் மீது கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த சுற்றறிக்கையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

Next Story