அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு
x
அக்.2-ல் கிராம சபை கூட்டம் - அரசு உத்தரவு

வரும் அக்.2ஆம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.கொரோனா பரவல் காரணமாக கடந்த ஆண்டு கிராம சபை கூட்டம் நடத்தப்படவில்லை.இந்நிலையில், வரும் அக்டோபர் 2ஆம் தேதி, காந்தி ஜெயந்தி அன்று, கட்டுப்பாடுகளுடன் கிராம சபை கூட்டத்தை நடத்த அரசு உத்தரவிட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள மாவட்டங்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்கள் நடத்தலாம் என்று அரசு தெரிவித்துள்ளது. கூட்டத்தின் போது கொரோனா தடுப்பு விதிமுறைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.திறந்த வெளி பகுதிகளில் கூட்டங்களை நடத்த வேண்டும் என்று கூறியுள்ள தமிழக அரசு,மாவட்ட ஆட்சியர்கள் இது குறித்த வழிமுறைகளை கிராம பஞ்சாயத்துகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. கூட்டம் நடத்துவதற்கு முன் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை செய்ய வேண்டும்,
கட்டாயம் முக கவசம் அணிவதோடு, 6 அடி சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும்,14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் கூட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது,கூட்டத்தை 10 மணிக்கு தொடங்கி 1 மணிக்குள் முடிக்க வேண்டும் உள்ளிட்ட கட்டுப்பாடுகளை தமிழக அரசு அறிவித்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்