குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு
குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு
x
குவாரி மீதான தடைக்கு எதிராக வழக்கு - இடைக்கால தடையை ரத்து செய்ய மறுப்பு

குவாரிகளில் பயன்படுத்தப்படும் கல் அறைக்கும் யூனிட்களை குறிப்பிட்ட இடைவெளியில் அமைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. குவாரிகளில் கல் அரைக்கும் யூனிட்டுகளை ஒரு கிலோ மீட்டர் இடைவெளியில் அமைக்க மாசு கட்டுப்பாட்டு வாரியம் வழங்கிய அனுமதிக்கு 2019ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.இதனை எதிர்த்து தொடரப்பட்ட மனு மீதான விசாரணை தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி அமர்வு முன்பு வந்தது.அப்பொழுது அரசு தரப்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், கல் அறைக்கும் யூனிட்களால் ஏற்படும் மாசு குறித்து தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனமான நீரி அமைப்பு ஆய்வு மேற்கொள்ள இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.எதிர்தரப்பில் ஆஜரான குவாரி உரிமையாளர்கள் குறிப்பிட்ட இடைவெளியை காரணம் காட்டி கல் அரவை யூனிட்களுக்கு தடை விதிக்கப்பட்டதால் குவாரிகளை திறக்க முடியவில்லை என முறையிட்டனர்.இந்த நிலையில்  மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவிற்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்க மறுத்த நீதிபதிகள்,குவாரிகளின் அமைவிடம் குறித்த நீரி அமைப்பின் இறுதி அறிக்கையை 6 மாதங்களில் தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர்.

Next Story

மேலும் செய்திகள்