காப்பகத்தில் இருந்து தப்பிச்சென்ற மாணவிகள் பத்திரமாக மீட்பு - காப்பக நிர்வாகிகளிடம் போலீஸ் விசாரணை
கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அருகே தனியார் காப்பகத்தில் இருந்து தப்பிச்சென்ற 3 மாணவிகள் பத்திரமாக மீட்கப்பட்டு அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.
வெள்ளிகோடு பகுதியில் உள்ள குழந்தைகள் இல்லத்தில் தங்கி இருந்த மூன்று மாணவர்கள் நேற்று திடீரென மாயமாகினர். இதுகுறித்து காப்பக நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில் மாணவிகள் மூன்று பேரும், மேக்காமண்டபம் பகுதியில் உள்ள தோழி வீட்டில் தஞ்சம் புகுந்தது தெரியவந்தது. இதையடுத்து மாணவிகளை மீட்ட போலீசார், அவர்களிடம் நடத்திய விசாரணையில், காப்பகத்தில் விதிக்கப்பட்ட கடுமையாக கட்டுப்பாடுகளே காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து அந்த மாணவிகள், நாகர்கோவிலில் உள்ள அரசு காப்பகத்தில் தங்கவைக்கப்பட்டனர்.
Next Story