சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

திருவண்ணாமலை மாவட்டத்தில் பூங்கா மற்றும் சுற்றுலா தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை வரும் 26ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சுற்றுலா தலங்களுக்கு செல்ல தடை நீட்டிப்பு - திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
x
திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனா தொற்று எண்ணிக்கை குறைந்தாலும், மாநில சராசரியை விட அதிகமாக உள்ளதால் மாவட்டத்திலுள்ள பொழுதுபோக்கு தலங்களுக்கு செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் சாத்தனூர் அணை, பீமன் நீர்வீழ்ச்சி, ஜவ்வாது மலை உள்ளிட்ட சுற்றுலாத்தலங்களுக்கு செல்ல விதிக்கப்பட்ட தடையை வரும் 26-ஆம் தேதி வரை நீட்டித்து மாவட்ட ஆட்சியர் முருகேஷ் உத்தரவிட்டுள்ளார். இதேபோல் வரும் 20ஆம் தேதி பொளர்ணமி நாளில் அண்ணாமலையார் கோவிலில் சாமிதரிசனம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அன்றயை தினம் அண்ணாமலையார் கோயிலில் பூஜைகள் மட்டுமே நடைபெறும் என்றும் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்