பல்லாவரம் வார சந்தை 4 மாதங்களுக்கு பிறகு செயல்பாடு- வியாபாரிகள், பொதுமக்கள் மகிழ்ச்சி

கொரோனா ஊரடங்கு காரணமாக இயங்காத சென்னை பல்லாவரம் வாரச் சந்தை 4 மாதங்களுக்கு மீண்டும் செயல்பட்டது. வியாபாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் மகிழ்ச்சி அளித்திருக்கும் இந்த நிகழ்வு குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு...
x
சென்னை பல்லாவரத்தில் ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் வாரச் சந்தை மிகவும் பிரபலம்.

காய்கறி, மளிகை, வீட்டு உபயோக பொருட்கள் தொடங்கி, செல்லப்பிராணிகள் வரை அனைத்தும் இந்த சந்தையில் குறைவான விலையில் கிடைக்கும் என்பதால், வாரம்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் பல்லாவரம் சந்தைக்கு வருகை தருகின்றனர்.

ஆனால், கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 4 மாதங்களாக பல்லாவரம் வாரச் சந்தை இயங்காதது பொதுமக்களுக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்தது. நூற்றுக்கணக்கான சிறு வியாபாரிகள் வாழ்வாதாரம் இழந்து தவித்தனர்.

இந்நிலையில், ஊரடங்கிற்கு பிறகு வெள்ளிக்கிழமை அன்று பல்லாவரம் வாரச் சந்தை மீண்டும் இயங்கியதால் வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

காய்கறி, மளிகை, பாத்திரங்கள், ஆடைகள், செல்லப்பிராணிகள், பூச்செடிகள் போன்றவற்றை 500-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் விற்பனை செய்த நிலையில், பொதுமக்கள் உற்சாகத்துடன்
வாங்கிச் சென்றனர்.



Next Story

மேலும் செய்திகள்