பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
x
பொதுப்பட்டியலில் கல்வி - உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொது பட்டியலுக்கு மாற்றியதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.மாநில அரசு அதிகாரத்தில் இருந்த கல்வியை மத்திய அரசுக்கு மாற்றப்பட்டதை எதிர்த்து திமுக எம்.எல்.ஏ. எழிலன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.அந்த மனுவில் கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றிய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.மாநில அரசின் தன்னாட்சி அதிகாரம் பறிக்கப்பட்டு, மத்திய அரசின் சட்டங்களுக்கு கட்டுப்பட்டு இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா போன்ற நாடுகளில் கல்வி மாகாண அரசுகளின் கட்டுப்பாட்டில் உள்ளதும் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. இதன் மீதான விசாரணையின் போது,  ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, அரசியல் சாசனத்தின் அடிப்படை கட்டமைப்பில் திருத்தம் கொண்டு வர முடியாது என வாதிட்டார்.அப்பொழுது குறுக்கிட்ட நீதிபதி,  மாநில அரசுகளுக்கு முழு அதிகாரம் வழங்கப்பட்டால் மட்டுமே முழுமையான கூட்டாட்சி முறை இருக்கும் என தெரிவித்தார்.இறுதியாக இந்த வழக்கில் தமிழக அரசை எதிர்மனுதாரராக சேர்த்த நீதிபதிகள் 8 வாரங்களில் பதிலளிக்க  மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டார். 

Next Story

மேலும் செய்திகள்