மூலப்பொருட்களை வெளியேற்ற அனுமதி கோரி மனு - ஸ்டெர்லைட் வழக்கு ஒருவாரத்திற்கு ஒத்தி வைப்பு
தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலையின் மூலப்பெருட்களை வெளியேற்ற அனுமதி கோரிய வழக்கை ஒத்தி வைத்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
ஸ்டெர்லைட் நிறுவனம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் வேதாந்தா குழுமத்திற்கு சொந்தமான ஸ்டெர்லைட் நிறுவனம் அனைத்து அனுமதியையும் பெற்று தொடங்கப்பட்டதாகவும், கொரோனா இரண்டாம் அலையின்போது மருத்துவத்திற்கு தேவையான ஆக்சிஜனை உற்பத்தி செய்ததாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும் ஆக்ஸிஜன் உற்பத்தியின் போது பயன்படுத்தப்பட்ட மூலப்பொருட்கள் மற்றும் கழிவுகளை வெளியேற்றவும், உற்பத்தி இயந்திரங்களை சரி செய்யவும் அனுமதிக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதற்கு பதிலளிக்க கால அவகாசம் வேண்டுமென தமிழக அரசு சார்பில் கேட்டு கொள்ளப்பட்டதால் ஸ்டெர்லைட் வழக்கை ஒருவாரத்திற்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Next Story