முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு - 20,000 பேர் போட்டியிடும் ஆன்லைன் தேர்வு
முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு - 20,000 பேர் போட்டியிடும் ஆன்லைன் தேர்வு
முதுநிலை மருத்துவ சேர்க்கைக்கான நீட் தேர்வு - 20,000 பேர் போட்டியிடும் ஆன்லைன் தேர்வு
முதுநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை துவங்கியது. முதுநிலை மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று நடைபெறுகிறது. தமிழகத்தில் நூற்றுக்கும் அதிகமான மையங்களில் நடக்கும் தேர்வில் 20 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நாளை நடைபெறும் நிலையில், இன்று முதுநிலை படிப்புக்கான தேர்வு, ஆன்லைன் வழியில் இன்று காலை துவங்கியது. மொத்தம், 800 மதிப்பெண்களுக்கான இந்த தேர்வானது, காலை 9 மணிக்கு தொடங்கி மதியம் 12:30 மணி வரை நடக்கிறது.சென்னை மாவட்டத்தில் எந்த தேர்வு மையமும் அமைக்கப்படாத நிலையில், சென்னை புறநகரில் 3 மையங்களில் மட்டுமே தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த 3 மையங்களில் 500 க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.
Next Story