சிறுபான்மை நலத்துறை - 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் பேரவையில் புதிய 17 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
x
சிறுபான்மை நலத்துறை - 17 புதிய அறிவிப்புகள் வெளியீடு 

சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே எஸ் மஸ்தான் பேரவையில் புதிய 17 அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.அதன் படி, 14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதிகளில் 14 லட்சம் ரூபாய் செலவில் நூலகம் ஏற்படுத்தப்படும் என்றும்,விடுதிகளுக்கு 5 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய் செலவில் உடற்பயிற்சி கருவிகள் மற்றும் விளையாட்டு கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.14 சிறுபான்மையினர் நல கல்லூரி விடுதி மாணவ மாணவியருக்கு தனித்திறன் மற்றும் ஆங்கில பேச்சாற்றல் பயிற்சி அளிக்கப்படும் என அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான் அறிவித்துள்ளார்.உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற உறுப்பினர் அல்லது குடும்பத்தினருக்கு வழங்கப்படும் திருமண உதவித்தொகை ஆண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 3,000 ரூபாயாகவும் பெண்களுக்கு 2,000 ரூபாயிலிருந்து 5,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சிறுபான்மையினருக்கு ஆயிரம் இலவச மின்மோட்டார் உடன் கூடிய தையல் இயந்திரங்கள் 45 லட்சம் ரூபாய் செலவில் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.தேனி மாவட்டத்தில் சிறுபான்மையினர் விடுதிக்கு சொந்தக் கட்டடம் 3 கோடியே 47 லட்சத்து 87 ஆயிரம் ரூபாய் செலவில் கட்டப்படும் என கூறப்பட்டுள்ளது.ஜெருசலேம் புனித பயணத்திற்கு  கன்னியாஸ்திரிகளுக்கு வழங்கப்படும் மானியம் 37 ஆயிரம் ரூபாயிலிருந்து 60 ஆயிரம் ரூபாயாக, 11 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் செலவில் உயர்த்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அனைத்து மாவட்டங்களில் கூடுதலாக முஸ்லிம் கிறிஸ்தவ மகளிர் உதவும் சங்கங்கள் துவங்கப்படும்.சென்னையில் உள்ள தமிழ்நாடு வக்பு வாரிய தலைமை அலுவலகத்திற்கு வக்பு வாரிய நிலத்தில் புதிதாக கட்டிடம் கட்டப்படும் என்பது உள்ளிட்ட   17 புதிய அறிவிப்புகளை அமைச்சர் மஸ்தான் வெளியிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்