கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - காவலாளி கிருஷ்ணதாபாவை விசாரிக்க திட்டம்

கொடநாடு வழக்கில் நடந்து வரும் விசாரணைக்காக எஸ்டேட் காவலாளியாக இருந்த கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.
கொடநாடு வழக்கில் தொடரும் அதிரடி - காவலாளி கிருஷ்ணதாபாவை விசாரிக்க திட்டம்
x
கொடநாடு வழக்கில் நடந்து வரும் விசாரணைக்காக எஸ்டேட் காவலாளியாக இருந்த கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். கொடநாடு வழக்கு தொடர்பாக கடந்த சில நாட்களாக மேல் விசாரணை நடந்தது. இதனிடையே இதுதொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்த நிலையில் விசாரணையை ஒத்தி வைத்த தனிப்படை போலீசார், ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். மேற்கு மண்டல ஐ.ஜி., சுதாகர் தலைமையில் உதகை எஸ்.பி., ஆஷிஷ் ராவத், தனிப்படை தலைமை அதிகாரி கிருஷ்ணமூர்த்தி, டி.எஸ்.பி., சுரேஷ், ஆய்வாளர் வேல்முருகன் உள்ளிட்டோர் 6 மணி நேரம் ஆலோசனை நடத்தினர். அப்போது சம்பவம் நடந்த நாளன்று கொடநாட்டில் பணியில் இருந்த காவலாளியான கிருஷ்ணதாபாவை நேபாளத்தில் இருந்து அழைத்து வந்து விசாரிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆலோசனை கூட்டத்திற்காக மாற்று வாகனத்தில் மாற்று உடையில் மேற்கு மண்டல ஐஜி சுதாகர் வந்து விட்டு சென்றது குறிப்பிடத்தக்கது... 



Next Story

மேலும் செய்திகள்