பஞ்சு மீதான வரி ரத்து - சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
x
பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரியை ரத்து செய்வதாக சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர், தமிழகத்தில் உள்ள நூற்பாலைகளுக்கு தேவையான 95% பஞ்சுகள் வெளிமாநிலங்களில் இருந்து வருவதாகவும், அதற்கு தமிழ்நாடு வேளாண் பொருட்கள் விற்பனைச் சட்டம் மூலம் பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி வசூலிக்கப்படுவதாகவும் தெரிவித்தார். பருத்தி கொள்முதலில் மட்டுமே விதிக்கப்பட வேண்டிய சந்தை நுழைவு வரியை பஞ்சு மற்றும் கழிவுப் பஞ்சு மீது விதிக்கப்படுவதாக குறிப்பிட்ட முதலமைச்சர், இதனால் வெளி மாநிலங்களில் இருந்து பஞ்சுப்பொருட்களை கொள்முதல் செய்யும் நூற்பாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் சிரமங்களை சந்திப்பதாக கூறினார். மேலும், பஞ்சு மீதான சந்தை நுழைவு வரியை  நீக்க வேண்டுமென நீண்ட நாட்களாக தொழில் முனைவோர் மற்றும் நெசவாளர்களின் கோரிக்கை வைத்ததால், பஞ்சு மீதான ஒரு சதவீதம் சந்தை நுழைவு வரி ரத்து செய்வதாக அறிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்