சிவசங்கர் பாபாவிற்கு 15 நாட்கள் நீதிமன்ற காவல்: பாபாவை விடுதலை செய்யக்கோரி பக்தர்கள் போராட்டம்

சிவசங்கர் பாபாவிற்கு மேலும் 15 நாட்கள் நீதிமன்ற காவல் அளிக்கப்பட்ட நிலையில் பாபாவை விடுதலை செய்யக்கோரி பக்தர்கள் முட்டிபோட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
x
கேளம்பாக்கத்தில் இயங்கி வரும் சுஷில் ஹரி பள்ளியில் மாணவியிடம் அத்துமீறியதாக பள்ளியின் நிறுவனர் சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டு செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனிடையே புழல் சிறையில் இருக்கும் சிவசங்கர் பாபாவின் நீதிமன்ற காவல் முடிவடைய உள்ள நிலையில், செங்கல்பட்டு  மகிளா நீதிமன்றத்தில் நீதிபதி அம்பிகா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். வழக்கை விசாரித்த நீதிபதி, சிவசங்கர் பாபாவை வரும் 17ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். அப்போது வெளியே காத்திருந்த சிவசங்கர் பாபாவின் பக்தர்கள், பாபா மீது பொய் வழக்குகள் போடப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு முன்வைத்தனர். பாபாவை விடுதலை செய்யக்கோரி அவர்கள் முட்டி போட்டுக் கொண்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் நீதிமன்ற வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்