சைக்கிளிங்கில் அசத்தும் 6 வயது சிறுவன்: 5.17 மணி நேரத்தில் 108 கி.மீ பயணம்

இடைவிடாது 108 கிலோ மீட்டர் சைக்கிளை இயக்கி உலக சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன்... அவரது சாதனை என்ன? முதலமைச்சரிடன் அவர் விடுத்துள்ள கோரிக்கை என்ன? விரிவாக பார்ப்போம்...
x
உடற்பயிற்சிக்காக அதிகாலை வேளையில் சென்னை சாலைகளை அதிநவீன சைக்கிள்களால் அலங்கரிப்பவர்கள் ஏராளம்..

இதில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினும் ஒருவர்...

இப்படி தொடர்ந்து சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபட்டு வரும் சென்னையைச் சேர்ந்த 6 வயது சிறுவன் ரியான், தற்போது WORLD BOOK RECORDS என்ற சாதனை புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார்.

சின்னஞ்சிறு வயதிலேயே சைக்கிளிங்கில் அசத்தும் ரியான், சென்னை நேப்பியர் பாலம் முதல் மாமல்லபுரம் வரை 108.09 கிலோ மீட்டர் தொலைவை 5 மணி நேரம் 17 நிமிடம் 6 நொடிகளில் கடந்தது தான் சாதனை...


6 வயதில் 108 கிலோ மீட்டர் இடைவிடாது சைக்கிள் ஓட்டினேன் எனக்கூறு ரியான், வீட்டில் முடங்கியிருக்கும் பலரையும் மிதிவண்டியை நோக்கி ஓட வைக்கிறார்...

இவரது சாதனைக்கு பக்கப்பலமாக இருப்பவர் அவரது தாயார் கவுரி ஷர்மா.. இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற இவர், தற்போது சென்னையில் வசித்து வருகிறார்.

தாயார் கவுரி ஷர்மா, மிதிவண்டி போட்டியில் தேசிய அளவில் சாதிக்க, அவர் மூலம் சைக்கிளிங்கில் ஆர்வம் கொண்ட மகன் ரியானும் தற்போது மிதிவண்டியில் கலக்கி வருகிறார்...

Next Story

மேலும் செய்திகள்