இளைஞர் கல் வீசி கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 12 பேர் கைது

வீரவ நல்லூர் அருகே இளைஞர் கல்லால் தாக்கி கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 12 பேர் கைது செய்யப்பட்டனர்.
இளைஞர் கல் வீசி கொல்லப்பட்ட சம்பவம்: மேலும் 12 பேர் கைது
x
நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே செங்குளம் கிராமத்தை சேர்ந்த கண்ணன் மகன்கள் விகாஸ் மற்றும் விஜய். இவர்கள் கோவில் திருவிழாவின் போது ஏற்பட்ட தகராறில் அப்பகுதியை சேர்ந்த பஞ்சாயத்து தலைவராக இருந்த ரவிச்சந்திரன் என்பவரை கடந்த 2016  -ம் ஆண்டு சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதன் காரணமாக குடும்பத்துடன் கிராமத்தை காலி செய்து அம்பை அடுத்துள்ள உள்ள வாகை குளத்திற்கு குடிபெயர்ந்தனர். இதனிடையே .  கடந்த 21 ஆம் தேதி விஜயின் பாட்டி காலமான நிலையில், செங்குளத்தில் உடலை அடைக்கம் செய்ய கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதையடுத்து மீண்டும் விஜய், விகாஸ் ஆகியோர் தகராறில் ஈடுபடவே, கிராம மக்கள் இருவரையும் கற்களால் தாக்கியுள்ளனர். இதில் விஜய் சம்பவ இடத்திலே உயிரிழந்துள்ளார். படுகாயம் அடைந்த விகாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக சிவபிரவீன், ஜெயமுருகன், கதிர் வேல், கருணாநிதி, ஜெயமோகன் உள்பட மொத்தம் 14 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்

Next Story

மேலும் செய்திகள்