மேகதாது அணை- பேரவையில் விவாதம்
காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என சட்டப்பேரவையில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் வலியுறுத்தியுள்ளார்.
மேகதாது அணை விவகாரம் தொடர்பாக பத்திரிகைகளில் வந்துள்ள செய்திகள் குறித்து நீர்வளத்துறை அமைச்சர் விவரிக்க சட்டப்பேரவையில் காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்தார்.
தொடர்ந்து பேசிய சிபிஎம் உறுப்பினர் நாகை மாலி, அணை விஷயத்தில் கர்நாடகா முதல்வரின் பேச்சு இந்திய இறையாண்மைக்கு எதிரானது என்று கண்டனம் தெரிவித்தார். இந்த விஷயத்தில் தமிழக உரிமையை காக்க அரசு அடுத்த என்ன செய்யப் போகிறது என மனிதநேய மக்கள் கட்சி உறுப்பினர் ஜவாஹிருல்லா கேள்வி எழுப்பினார். பாரபட்சத்துடன் மத்திய அரசு செயல்படுவதை கருத்தில் கொண்டு மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு சட்டரீதியிலான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டும் என சிபிஐ உறுப்பினர் ராமசந்திரன் வலியுறுத்தினார்.பின்னர் பேசிய எதிர்க்கட்சி துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வம், மேகதாது அணை விவகாரத்தில் தொடர்ந்து அடம்பிடிக்கும் கர்நாடகா அரசுக்கு எதிரான அடுத்த கட்ட நடவடிக்கையை முதல்வர் எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். இதற்கு பதிலளித்த நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், காவிரி பிரச்சினையில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் வெற்றி உறுதி என்றார்.அடுத்த வாரம் கூட உள்ள காவிரி மேலாண்மை ஆணையம் கூட்டத்தில் மேகதாது அணை விவகாரம் குறித்து விவாதிக்க இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என அமைச்சர் கூறினார்
Next Story