நடப்பாண்டு பொறியியல் படிப்பில் சேர 1.74 லட்சம் பேர் விண்ணப்பம்
பொறியியல் படிப்பில் சேருவதற்கு இந்த ஆண்டு கூடுதலாக 14 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டு பொறியியல் படிப்பில் சேருவதற்காக 1 லட்சத்து 74 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
இது கடந்த ஆண்டை விட 14 ஆயிரத்து 96 பேர் பொறியியல் படிப்புகளுக்கு கூடுதலாக விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2019ஆம் ஆண்டு ஒரு லட்சத்து 33 ஆயிரம் பேரும், கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 60 ஆயிரம் பேரும் விணப்பித்து இருந்தனர்.
நடப்பாண்டுக்கான விண்ணப்ப பதிவு நேற்றுடன் நிறைவடைந்த நிலையில், மாணவர்களுக்கான தரவரிவைப் பட்டியல் செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியிடப்படுகிறது.
இதை தொடர்ந்து சிறப்பு பிரிவு மாணவர்களுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 7 ஆம் தேதியும், பொதுப்பிரிவுக் கலந்தாய்வு செப்டம்பர் 14 ந் தேதி தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
Next Story