தடுப்பூசி போடாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை?
தடுப்பூசி போட்டுக்கொள்ளாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்திருப்பது, ஆசிரியர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விருதுநகரில் பள்ளிகள் திறப்பு குறித்து நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், பள்ளியில் ஒரு ஆசிரியர் தடுப்பூசி போடவில்லை என்றாலும், அந்த பள்ளி திறக்கப்படாது என மாவட்ட ஆட்சியர் மேகநாத ரெட்டி தெரிவித்து இருப்பதாகவும்,இதேபோல், தடுப்பூசி செலுத்தாத ஆசிரியர் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டிருப்பதாக, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மகேஸ்வரி வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளார்.இந்நிலையில், பள்ளிகளில் திறப்பு குறித்து ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு வகையான விதிமுறைகள் வெளியிடப்படுவது, ஆசிரியர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.மாநிலம் முழுவதற்கும் ஒரே மாதிரியான வழிகாட்டி நெறிமுறைகளை வெளியிடுவதற்கு பள்ளிக்கல்வித்துறை முன்வர வேண்டும் என ஆசிரியர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
Next Story