சுகேஷ் வீட்டில் அமலாக்கப்பிரிவினர் சோதனை- 16 சொகுசு கார்கள் பறிமுதல்

இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரின் வீட்டில் இருந்து 16 சொகுசு கார்களை அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர்.
x
அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்காக அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் தர முயன்றதாக குற்றம்சாட்டப்பட்டது. இது தொடர்பான வழக்கில் சுகேஷ் சந்திரசேகர் என்ற இடைத்தரகர் கைதாகி சிறையில் உள்ளார். இந்நிலையில், சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் இருக்கும், சுகேஷ் சந்திரசேகருக்கு சொந்தமான வீட்டில் அமலாக்கப் பிரிவு அதிகாரிகள் 7 நாட்கள் சோதனை நடத்தினர். சோதனையின் முடிவில் 70 கோடி ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் மற்றும் கேரவன் வாகனத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதனுடன் லேப்டாப் மற்றும் 60 ஆயிரம் ரூபாய் ரொக்கத்தையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து உள்ளனர். இதனிடையே, சிறையில் இருக்கும் சுகேஷ் சந்திரசேகரை, சென்னையில் உள்ள வீட்டிற்கு அழைத்து வந்து விசாரணை நடத்த அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். 


Next Story

மேலும் செய்திகள்