லஞ்சம் வாங்கிய புகாரில் பத்திர பதிவாளர் பணியிடை நீக்கம் - காரில் இருந்து ரூ.48,000 பறிமுதல்
கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்கிய புகாரில் மாவட்ட பத்திர பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கரூர் மாவட்டத்தின் பத்திரப்பதிவு துறையில் நிர்வாக பதிவாளராக இருந்த பாஸ்கரன் கடந்த 13ம் தேதி காரில் சென்றுக் கொண்டிருந்த போது, அவரின் வாகனத்தை வழிமறித்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் சோதனையிட்டனர். அதில் கணக்கில் வராத 48 ஆயிரம் ரூபாய் பணம் இருந்தது தெரிய வந்தது. விசாரணையில் பத்திரப்பதிவு துறையில் அன்பளிப்பாக பணம் கொடுக்கப்பட்டது தெரிய வரவே, மாவட்ட பத்திரப்பதிவு துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். அப்போது சில ஆவணங்களை கைப்பற்றியதாக கூறப்படுகிறது. தொடர்ந்து மாவட்ட பதிவாளர் பாஸ்கரன் மற்றும் ஓட்டுனர் சந்திரசேகரன் ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், லஞ்சம் வாங்கிய புகாரில் சிக்கியுள்ள பத்திர பதிவாளர் பாஸ்கரனை பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக பத்திரப் பதிவுத்துறை டிஐஜி லதா உத்தரவிட்டார்.
Next Story