"11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வெப்பச்சலனம், வளி மண்டல மேலடுக்கு சுழற்சி உள்ளிட்ட காரணங்களால் தமிழகத்தின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே, 11 மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story