47 ஐஎப்எஸ் அதிகாரிகள் இடமாற்றம் - தமிழக அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 47 ஐஎப்எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் புதியதாக திமுக அரசு அமைந்த நிலையில் ஐஏஎஸ் அதிகாரிகள், ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்ட நிலையில், தற்போது வனத்துறையைச் சேர்ந்த ஐஎப்எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பல்லுயிர்ப்பரவல் வாரிய உறுப்பினர் செயலராக இருந்த மிட்டா பானர்ஜி, வனக்குற்றப்பிரிவின் கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலராகவும்,முதுமலை புலிகள் காப்பகத்தின் கள இயக்குனராக இருந்த கே.கே.கவுஷால், காடுகள் மற்றும் விரிவாக்க கூடுதல் முதன்மை வனப்பாதுகாவலராகவும்,வண்டலூர் அறிஞர் அண்ணா வன உயிரியல் பூங்காவின் இயக்குனர் தேபஷிஸ் ஜனா, தமிழ்நாடு பல்லுயிர்ப்பரவல் வாரிய உறுப்பினர் செயலராகவும் நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர்,தலைமை வனப்பாதுகாவர், துணை வனப்பாதுகாவலர் நிலையில் இருந்த 47 ஐஎப்எஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
Next Story