தமிழகத்தில் மேலும் 1,804 பேருக்கு கொரோனா
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் தினசரி கொரோனா பாதிப்பு சற்று குறைந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 92 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் புதிதாக ஆயிரத்து 804 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 25 லட்சத்து 92 ஆயிரத்து 436 ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து ஒரே நாளில் ஆயிரத்து 917 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில், 20 ஆயிரத்து 225 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனிடையே தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் 209 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையை அடுத்து கோவையில் 206 பேருக்கும், ஈரோட்டில்167 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
தஞ்சாவூரில்121 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ள நிலையில், சேலத்தில்117 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story