விவசாயியை தாக்கி, காலில் விழுந்த விவகாரம் - வி.ஏ.ஒ., கிராம உதவியாளர் பணியிடை நீக்கம்
கோவை அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயி தாக்கி காலில் விழ வைத்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர் முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
கோவை அன்னூர் ஒட்டர்பாளையத்தில் விவசாயி தாக்கி காலில் விழ வைத்த விவகாரத்தில் கிராம நிர்வாக அலுவலர் கலைச்செல்வி, உதவியாளர்
முத்துசாமி ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இருவர் மீதும் குற்றவியல் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ள அன்னூர் காவல்துறையினர் , ஒட்டர்பாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் நடந்த சம்பவத்தை செல்போனில் பதிவு செய்து, தவறான நோக்கத்துடன் சமூக வலைதளங்களில் பதிவிட்ட நபர் குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story