15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிறுமியை பலியல் பலாத்காரம் செய்த புகாரில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
15 வயது சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை - ஒருவர் கைது மற்றொருவர் தப்பி ஓட்டம்
x
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் சிறுமியை பலியல் பலாத்காரம் செய்த புகாரில் இருவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.  
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் விழுதுடையான் கிராம சேர்ந்த பிரகாஷ் அண்மையில் வெளிநாட்டில் இருந்து அண்மையில் சொந்த ஊர் திரும்பி உள்ளார். அதே ஊரைச் சேர்ந்த 15 வயது சிறுமியை கட்டாய வல்லுறவு செய்துள்ளார். இதையறிந்த விளந்தை கிராமத்தை சேர்ந்த சிவகுமாரும், சிறுமியை மிரட்டி பாலியல் உறவு கொண்டுள்ளார். இதனிடையே, சிறுமி கரூருக்கு வேலைக்கு சென்றுவிட்டார். அங்கு சிறுமி கர்ப்பமானது தெரியவந்ததுz. ஆனால், வரும் வழியிலேயே வயிற்று வலி ஏற்பட்டு, கரூரில் குழந்தை பிறந்துள்ளது. அதை, குழந்தைகள் தத்தெடுப்பு மையத்தில் ஒப்படைத்த சிறுமி, தாயுடன் சொந்த ஊர் போலீசாரிடம் புகாரளித்தார். வழக்குப்பதிவு செய்து போக்சோவில் பிரகாஷை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள சிவக்குமாரை தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்