"வாக்குமூலம் கொடுக்க மாட்டேன்" - அடம்பிடித்த மீரா மிதுன்
கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
கேரளாவில் கைது செய்யப்பட்ட நடிகை மீரா மிதுன், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.பட்டியல் இனத்தவர்கள் குறித்து அவதூறாக பேசிய புகாரில், நடிகை மீரா மிதுன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து, தலைமறைவாக இருந்த அவரை கேரளாவில் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். இதனை தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்துக்கு மீரா மிதுன் இன்று காலை அழைத்து வரப்பட்டார்.
இதனிடையே, விசாரணைக்கு ஒத்துழைக்காமல் மீரா மிதுன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், தனது வழக்கறிஞர் வந்தால் மட்டுமே பேசுவேன் என்று மீரா மிதுன் சத்தம் போட்டதால் காவல் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, விசாரணைக்கு பின் மீரா மிதுனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக போலீசார் கூறியுள்ளனர். இதனிடையே குற்றத்திற்கு உடந்தையாக இருந்த மீரா மிதுனின் ஆண் நண்பர் அபிசேக் ஷாம் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story