75ஆவது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் சுதந்திர தின நினைவுத் தூணை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். 75-வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் சுதந்திர தின நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருந்தார். இதன்படி, சென்னை காமராஜர் சாலையில் நேப்பியர் பாலம் அருகே நினைவுத்தூண் கட்டப்பட்டது. இந்நிலையில், 75-வது சுதந்திர தின நினைவுத்தூணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், எ.வ.வேலு, பொன்முடி உள்ளிட்டோர் உடன் இருந்தனர். 1 கோடியே 94 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இந்த நினைவுத்தூண் 59 அடி உயரம் கொண்டது. அதில், பஞ்சலோகத்தால் ஆன அசோக சக்கரம், 4 தலையுடன் கூடிய சிங்க முகம், துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் உருவ பொம்மை ஆகியவை பொருத்தப்பட்டு உள்ளது. மேலும், இந்த நினைவுத்தூண் 10 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Next Story