12 நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆன பெண் மரணம் - தையல் பிரிக்க சென்ற போது உயிரிழந்த பரிதாபம்

திருப்பத்தூர் அருகே பிரசவம் ஆன பெண், மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறிய உறவினர்கள், இறந்தவரின் உடலை பார்த்து கதறி அழுதது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.
12 நாட்களுக்கு முன்பு பிரசவம் ஆன பெண் மரணம் - தையல் பிரிக்க சென்ற போது உயிரிழந்த பரிதாபம்
x
தர்மபுரியை சேர்ந்த அருண்குமார் மற்றும் அவரது மனைவி ரம்யாவுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் கடந்த பின்பும் குழந்தை இல்லாததால், திருப்பத்தூர் கச்சேரி தெருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் கடந்த 2ம் தேதி அறுவை சிகிச்சை மூலம் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த நிலையில் அறுவை சிகிச்சையின் போது போடப்பட்ட தையலை பிரிக்க மீண்டும் மருத்துவமனைக்கு ரம்யா வந்துள்ளார். சிகிச்சையின் போது வயிற்றுப்பகுதியில் வீக்கம் ஏற்பட்டு ரம்யா உயிரிழந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மருத்துவர்களிடம் கேட்டபோது, தையல் போட்ட இடத்தில் இருந்த ரத்த கசிவால் ரம்யா உயிரிழந்ததாக பதிலளிக்கவே, 50க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். மருத்துவர்களின் அலட்சிய போக்கும், தவறான சிகிச்சை முறையுமே ரம்யாவின் உயிரை பறித்ததாக கூறிய உறவினர்கள், அவரின் உடலை பார்த்து கதறி அழுதனர். 


Next Story

மேலும் செய்திகள்