பெட்ரோல் விலை குறைப்பு-ஓட்டுநர்கள் வரவேற்பு - டீசல் விலையையும் குறைக்க கோரிக்கை

தமிழக அரசு 3 ரூபாய் விலை குறைத்ததை தொடர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 47 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
x
தமிழக அரசு 3 ரூபாய் விலை குறைத்ததை தொடர்ந்து, சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 99 ரூபாய் 47 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது. 
பெட்ரோல், டீசல் விலையை குறைப்போம் என திமுக தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. அதன்படி பெட்ரோல் விலையை மட்டும் மூன்று ரூபாய் குறைத்து பட்ஜெட்டில் திமுக அரசு அறிவித்தது. இந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்ததால் வாகன ஓட்டிகள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். எனினும், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைத்ததால் தான், அத்தியாவசியப் பொருட்களின் விலை ஏற்றம் கட்டுப்படுத்த முடியும் என பெரும்பாலான வாகன ஓட்டுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மேலும், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது. 


Next Story

மேலும் செய்திகள்