ஸ்டாலின் அரசின் முதல் பட்ஜெட் தாக்கல் : பட்ஜெட் தாக்கல் செய்தார் நிதியமைச்சர்
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் முழு நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்.
முதல் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதால், முதலமைச்சர், அமைச்சர்கள், எதிர்க்கட்சி தலைவர், சட்ட உறுப்பினர்கள் இருக்கை முன்பு பொருத்தப்பட்டிருந்த மேஜை கணினியில் பட்ஜெட் உரை ஒளிபரப்பானது. மேலும், கணினி தொடுதிரை எழுதுகோல் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. முன்னதாக, நிதியமைச்சர் பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கியதும், அதிமுக உறுப்பினர்கள் பேச வாய்ப்பு கேட்டு கடும் அமளியில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்கள், சட்டப்பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
Next Story