கடன் தவணை கட்டாததால் நடவடிக்கை: டிராக்டரை பறிமுதல் செய்த வங்கி ஊழியர்கள் - விவசாயி டிராக்டர் முன் படுத்து போராட்டம்
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே கடன் தவணை கட்டவில்லை என்று கூறி வங்கி ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்ததால் பாதிக்கப்பட்ட விவசாயி டிராக்டர் முன்பு படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார்.
பொன்னாப்பூர் பகுதியை சேர்ந்த விவசாயி சுரேஷ்குமார், வங்கியொன்றில்
நான்கே முக்கால் லட்சம் ரூபாய் கடன் பெற்று டிராக்டர் வாங்கியுள்ளார். இரண்டு தவணைகள் கட்டாததால் வங்கி ஊழியர்கள் டிராக்டரை பறிமுதல் செய்து கொண்டு சென்றனர். துரத்தி சென்று டிராக்டரை மடக்கிய சுரேஷ்குமார் அதன் முன் படுத்து போராட்டத்தில் ஈடுபட்டார். ஊர் மக்கள் திரண்டதால் டிராக்டரை விட்டுவிட்டு வங்கி ஊழியர்கள் சென்று விட்டனர்.
Next Story