தடையை மீறி நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், சட்டப்பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.
x
பொதுவெளியில் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தால், சட்டப்பிரிவு 188-ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என, சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது. சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி பொதுவெளியில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்படுகிறது. கடந்த வாரம், ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களில் 20 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால், அத்தகைய நிகழ்ச்சியை ஏற்பாடு செய்யும் அமைப்பினரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அரசின் வழிமுறைகளை மீறுபவர்கள் மீது பேரிடர் மேலாண்மை சட்டம் 2005 பிரிவு 51 முதல் 60 இன் படியும், இந்திய குற்றவியல் தண்டனை சட்டப்பிரிவு 188 இன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி அறிக்கையின் வாயிலாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்