கிளப்பில் மெம்பர் ஆனால் எல்லாம் இலவசம் - பெண் ஆசை காட்டி மோசடி செய்வதாக புகார்

சென்னையில் உள்ள கிளப் ஒன்றில் பெண் ஆசை காட்டி பணத்தை மோசடி செய்ததாக வந்த புகார்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
கிளப்பில் மெம்பர் ஆனால் எல்லாம் இலவசம் - பெண் ஆசை காட்டி மோசடி செய்வதாக புகார்
x
சென்னை அபிபுல்லா சாலையில் தனியாருக்கு சொந்தமான கிளப் ஒன்று இயங்கி வருகிறது. பொதுவாக இதுபோன்ற கிளப்பில் இணைந்து கொண்டால் பார், ஸ்பா, தங்கும் விடுதி, ஜிம், குடும்ப சுற்றுலா என அனைத்தும் இலவசம் என்ற கவர்ச்சிகரமான அறிவிப்புகள் வரும்... வார இறுதியில் குடும்பத்தோடு செலவிட விரும்புவோர் இதுபோன்ற கிளப்புகளில் உறுப்பினராக சேர்ந்து கொள்வார்கள். 

ஆனால் தியாகராய நகரில் உள்ள இந்த கிளப்போ, ஒரு படி மேலே போய், பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம் என்ற அறிவிப்பை வெளியிட்டதாக கூறப்படுகிறது. கிளப்பில் ஆயுட்கால உறுப்பினர் ஆக  சேர 40 ஆயிரம் ரூபாய் வரை கட்டினால் போதும் என்றும், அவ்வாறு செய்தால் தங்களுக்கு சொந்தமான தங்கும் விடுதிகளில் பெண்களுடன் இருக்கலாம் என்ற அறிவிப்பும் வெளியிடப்பட்டதாக தெரிகிறது.

இதனை நம்பி கூடுவாஞ்சேரியை சேர்ந்த தீனதயாளன் முதற்கட்டமாக 5 ஆயிரம் ரூபாய் பணத்தை கட்டியுள்ளார். ஆனால் அவர்கள் சொன்னது போல எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. கிரெடிட் கார்டை எடுத்துக் கொண்டு சென்ற தன்னிடம் ஒரு லட்ச ரூபாய் வரை பண மோசடி செய்ததாக தீனதயாளன் புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

இதனிடையே பாண்டிபஜார் காவல் நிலைய உதவி ஆய்வாளர், கிளப் நிர்வாகத்திற்கு உடந்தையாக செயல்படுவதாகவும் அவர் குற்றச்சாட்டு முன்வைத்தார். இதேபோல் சங்கர் என்பவரும் 31 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தி ஏமாந்ததாக தெரிகிறது. 
இதுதொடர்பாக கிளப்பின் பெண் நிர்வாகி ஒருவருடன் சங்கர் பேசும் ஆடியோவும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது....


Next Story

மேலும் செய்திகள்