விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி
விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி
விசேஷ நாட்களில் தரிசனத்துக்கு தடை.. கொரோனா பரவலை கட்டுப்படுத்த அரசு முயற்சி
ஆடி அமாவாசை, ஆடி பூரம் ஆகிய விசேஷ நாட்களன்று கோயில்களில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடைவிதித்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உத்தரவிட்டுள்ளார்.ஆடி மாதம் வழக்கமாக கோயில்களில் ஏராளமான திருவிழாக்கள் நடைபெறும்.சமீப காலமாக கொரோான தொற்று மெல்ல அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.அதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தளங்களிலும் வரும், 9ம் தேதி முதல் அடுத்த 2 வாரங்களுக்கு வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு ஆகிய மூன்று நாட்களும், பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டது.இந்நிலையில், நாளை ஆடி அமாவாசை, மற்றும் வரும் 11ம் தேதி ஆடிபூரத் திருவிழாவும் வரவுள்ள நிலையில்,கோயில்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என்பதால், குறிப்பிட்ட 2 நாட்களுக்கு, பக்தர்களுக்கு சாமி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Next Story