நிலப்பிரச்சினையால் நடந்த மோதல் - ஒருவர் பலி, 7 பேர் மீது வழக்குப்பதிவு
கரூர் அருகே நிலப்பிரச்சினை காரணமாக நடந்த மோதலில் ஒருவர் கொல்லப்பட்டார்.
குளித்தலை வட்டம் சின்னயம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட ஈச்சம்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணா. இவருக்கும் இவரின் சகோதரர் பொம்மாவுக்கும் இடையே நிலப்பிரச்சினையால் முன்விரோதம் இருந்தது. இதனால் இரு தரப்புக்கு இடையே ஏற்பட்ட மோதலில் கிருஷ்ணாவின் மாமனாரான காமன் தலையில் அடிபட்டு உயிரிழந்தார். மேலும் 2 பேர் படுகாயமடைந்த நிலையில் இதில் தொடர்புடைய 7 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story