வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் - விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு

சென்னை தலைமை செயலகத்தில் வேளாண் பட்ஜெட் தொடர்பாக, விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடைபெற்றது.
வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் - விவசாய சங்க பிரதிநிதிகளிடம் கருத்துக்கேட்பு
x
வரும் 14ஆம் தேதி வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இதையடுத்து அரசு தரப்பில், விவசாயம் சார்ந்த பல்வேறு தரப்பினரின் கருத்து பெறப்பட்டு வருகிறது.இதன் தொடர்ச்சியாக இன்று நடைபெற்ற கருத்து கேட்புக் கூட்டத்தில், வேளாண் துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், நிதித்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், வேளாண் துறை செயலாளர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதில் 
தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்று கருத்துகளை தெரிவித்தனர். பாசன வசதி, விவசாய உபகரணங்களுக்கு மானியம், நவீன விவசாய பொருட்களை பெற வழிவகை செய்வது என பல கருத்துகள் முன் வைக்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்