ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, மக்கள் நடமாட்டம் எப்படி..! கூகுள் அறிக்கை வெளியீடு

தமிழகத்தில் ஊரடங்கு தளர்வுகளுக்கு பிறகு, பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் குறித்து கூகுள் மக்கள் நடமாட்ட அறிக்கை வெளியிட்டுள்ளது.
x
தமிழ்நாட்டில் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து ஊரடங்கில்
படிப்படியாக கூடுதல் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்மூலம், பொது இடங்களில் மக்கள் நடமாட்டம் வழக்கத்தை விட வேறுபட்டிருப்பது கூகுளின் மக்கள் நடமாட்ட அறிக்கையில் தெரியவந்துள்ளது.

ஜூன் 19 முதல் ஜூலை 31 வரையிலான தரவுகளின் படி, உணவகங்கள், ஷாப்பிங் மால்கள், திரையரங்குகள் உள்ளிட்ட பொழுதுபோக்குக்கான இடங்களில், மக்கள் நடமாட்டம் 14 சதவீதம் குறைந்திருக்கிறது. அதேசமயம், மளிகை மற்றும் காய்கறி சந்தைகள், மருந்துக் கடைகள் போன்றவற்றில், மக்கள் நடமாட்டம் 43 சதவீதம் அதிகரித்துள்ளது. 

கடற்கரைகள், பூங்காக்கள் உள்ளிட்ட இடங்களில் மக்கள் நடமாட்டம் 3 சதவீதம் குறைந்திருப்பதாகவும், பொதுப் போக்குவரத்து சேவைகளான பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள், மெட்ரோ ரயில் நிலையங்களில் மக்கள் நடமாட்டம் ஒரு சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் கூகுள் தரவு தெரிவிக்கிறது. மேலும், வீட்டிலிருந்தே வேலை பார்க்கும் சூழல் நீடிக்கும் காரணத்தால் பணியிடங்களில் மக்கள் நடமாட்டம் 3 சதவீதம் குறைந்திருக்கிறது. குடியிருப்புப் பகுதிகளில் 7 சதவீதம் கூடியிருக்கிறது.


Next Story

மேலும் செய்திகள்